உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தற்போது பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளார். அவர் ஏற்கனவே போரின் நடுவில் ரஷ்யாவால் மூன்று முறை தாக்கப்பட்டார். இத்தகைய சூழ்நிலையில், உக்ரைன் அதிபரை பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்ற அமெரிக்காவும், பிரிட்டனும் ஒன்றிணைந்துள்ளன. ஜெலென்ஸ்கியை மீட்க இரு நாட்டு ராணுவமும் ரகசிய திட்டம் வகுத்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் அதிகரித்து வருவதால் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. அவர் அண்மையில் உக்ரைனை விட்டு வெளியேறி போலந்தில் தஞ்சமடைந்ததாக ரஷ்யா கூறியது. ஆனால், ரஷ்யாவின் இந்தக் அறிவிப்பை உக்ரைன் நிராகரித்தது. இதனிடையே, அதிக ஆபத்தில் இருக்கும் உக்ரைன் அதிபரை மீட்பதற்காக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க சிறப்புப் படைகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ‘போரை நிறுத்த புடினிடம் பேசுங்கள்’: பிரதமர் மோடியிடம் உக்ரைன் கோரிக்கை
ரகசிய திட்டம்
UK சிறப்புப் படைகளும், SS கமாண்டோக்களும், போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டு வெளியேற்றத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன் அமெரிக்கா அரசு பல முறை, உக்ரைன் அதிபரை வெளியேற்ற முன்வந்தது. அமெரிக்க ஜனாதிபதியும் இதை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, அதனை உக்ரைன் அதிபர் ஏற்கவில்லை. மாறாக, ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவதற்கு போதுமான ஆயுதங்களை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்
உக்ரைன் அதிபருக்கு குறி
போர் உச்சக்கட்டத்தில் எட்டியிருக்கும் சூழலில் உக்ரைன் அதிபரை ரஷ்யா குறிவைத்துள்ளதாக மிரர் செய்து வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் ஸ்பெட்ஸ்னாஸ் சிறப்புப் படைகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே மூன்று முறை அவரை தாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: கோரிக்கைகளை ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின்
திட்டம் என்ன?
இனிவரும் நாட்களில் உக்ரைன் அதிபரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், அவரை உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா சிறப்பு திட்டம் ஒன்றை வகுத்துள்ளன. அந்த திட்டத்தில் ஈடுபடுவதற்காக 70 இங்கிலாந்து வீரர்களும், 150 அமெரிக்க வீரர்களும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளதாக மிரர் கூறியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR