கொப்பால்: வரலாற்று சிறப்புமிக்க கங்காவதி கிஷ்கிந்தா அஞ்சனாத்ரி மலை மீது உள்ள ஆஞ்சநேயாஸ்வாமி கோவிலுக்கு, ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி மதுரா ஆஸ்ரமத்தின் சார்பில் 251 கிலோ எடை கொண்ட மணி காணிக்கையாக வழங்கியுள்ளனர். இதை செய்வதற்கு 2.10 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. பத்து பேர் கொண்ட ஊழியர்கள், மலை மீது கொண்டு வந்தனர்.16 தங்க பதக்கம் பெறும் மாணவிபெலகாவி: விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 21 வது பட்டமளிப்பு விழா பெலகாவியின் ஞானசங்கமா வளாகத்தில் வரும் 10 ல் நடக்கிறது.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் பட்டமளிக்கிறார். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பி.இ., சிவில் பொறியியல் பிரிவை சேர்ந்த புஷ்ரா மத்தீன் என்ற மாணவி 16 தங்க பதக்கங்கள் பெறவுள்ளார்.பத்திரமாக மீட்கப்படுவர்உத்தர கன்னடா: ”உக்ரைனிலிருந்து தாய்நாட்டுக்கு திரும்ப, இந்திய துாதரகம் உதவவில்லை என ஒரு மாணவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அது திருவிழா கொண்டாடும் பகுதி அல்ல. போர் நடக்கும் பகுதி. அங்கிருந்து பாகிஸ்தானியரும் மூவர்ண கொடி பயன்படுத்தி எல்லை தாண்டியுள்ளனர்.
எனவே உக்ரைனில் உள்ள அனைத்து இந்திய மாணவர்களும் பத்திரமாக மீட்கப்படுவர்,” என சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி கார்வாரில் நேற்று தெரிவித்தார்.மக்கள் விருப்பத்துக்கு விரோதமான தேர்தல்ராய்ச்சூர்: ”நாட்டில் தற்போது நடக்கும் தேர்தல் முறை, ஜனநாயக நடைமுறை மக்கள் விருப்பத்துக்கு விரோதமாக நடக்கிறது. இளைஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், மூத்தவர்கள் கேள்வி கேட்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன் மக்கள் குரலாக மக்கள் பிரதிநிதிகள் செயல்பட்டனர். தற்போது அதற்கு எதிராக நடக்கிறது,” என கர்நாடக சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி ராய்ச்சூரில் நேற்று நடந்த தேர்தல் சீர்திருத்த நடைமுறை கருத்தரங்கில் கவலை தெரிவித்தார்.கல்லுாரிகளில் பொறுப்பு முதல்வர்கள்பெங்களூரு: ”அரசு முதல் நிலை கல்லுாரிகளில் காலியாக உள்ள 410 முதல்வர்களின் பதவிகளுக்கு, மூத்த பேராசிரியர்கள் பொறுப்பு முதல்வர்களாக கவுன்சிலிங் நடத்தி தேர்வு செய்யப்படுவர். பேராசிரியர்கள் இடம் மாற்றத்துக்கு விதிக்கப்பட்ட தடையை, கர்நாடக உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளதால் விரைவில் இடம் மாற்ற பணிகள் ஆரம்பிக்கப்படும். அதுவும் கவுன்சலிங் வாயிலாக தான் நடக்கும்,” என உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா பெங்களூரில் நேற்று தெரிவித்தார்.ஒத்திவைப்பு தீர்மானம் சமர்ப்பிக்கப்படுமா?ஷிவமொகா: பஜ்ரங்தள் பிரமுகர் ஹர்ஷா கொலை வழக்கு மற்றும் அவரது இறுதி ஊர்வலத்தின் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் கர்நாடக சட்டசபையில் விவாதிக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதற்கான நோட்டீஸ், சபாநாயகர் அலுவலகத்தில் நாளை சமர்பிக்க உள்ளதாக அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது. இதே வேளையில் அமைச்சர் ஈஸ்வரப்பா, 144 தடை உத்தரவை மீறி ஊர்வலத்தில் பங்கேற்றது குறித்தும் விவாதிக்க காங்., தயாராகிறது.காங்கிரசில் கோஷ்டி அரசியல்கலபுரகி: ”காங்கிரசில் யார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததோ, அவர்களுக்கு தான் விலை அதிகம் கொடுக்கின்றனர்.
என்னிடம் பணம் இல்லை. இதனால் யாரும் என்னை கேட்கமாட்டார்கள். ஆனாலும் காங்கிரசைு முழு விவாகரத்து செய்யவில்லை. காங்கிரசில், கோஷ்டி அரசியல், தனிநபர் அதிகாரம் நடக்கிறது,” என அக்கட்சி எம்.எல்.சி., இப்ராகிம் கலபுரகியில் நேற்று தெரிவித்தார்.நன்கொடையாளர்களுக்கு அழைப்புகோலார்: பியூச்சர் இண்டியா அறக்கட்டளை சார்பில் கோலாரின் 50 அரசு பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள் நேற்று வழங்கப்பட்டன. ”தனியார் பள்ளிகளுக்கு போட்டிபோடும் அளவுக்கு அரசு பள்ளிகள் அழகுப்படுத்த வேண்டும்.
புதுமையை புகுத்த வேண்டும். இதற்கு நன்கொடையாளர்கள் முன் வர வேண்டும்,” என கல்வி துறையின் மாவட்ட இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி அழைப்பு விடுத்தார்.டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கைபெங்களூரு: சர்வக்ஞநகரில் காங்கிரஸ் சார்பில் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கையை, அக்கட்சி மாநில தலைவர் சிவகுமார் நேற்று துவக்கி வைத்தார். ஒவ்வொரு பூத் அளவிலும், தலா ஒரு ஆண், பெண்ணை உறுப்பினராக நியமிக்க வேண்டும். அவர்கள் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும், என அவர் கூறினார்.
Advertisement