தூத்துக்குடியில் உள்ள திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த அண்ணா தலைமையில் திமுக ஆட்சியமைத்த நாள். சோதனைகள், அடக்குமுறைகள், அவதூறுகள் அத்தனையும் கடந்து மக்களின் பேரன்போடு எத்தனை சாதனைகள் படைத்துள்ளோம். பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் திமுக வாளும் கேடயமுமாகத் தமிழ்நிலத்தை என்றும் காக்கும்.
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன். தேர்ந்தெடுக்ப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினர் சிலர் செய்த செயலால் வருந்தினேன்.
திமுகவினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை திமுகவினர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை திருப்தி செய்வதற்காக மட்டும் திமுகவினரை எச்சரிக்கவில்லை. திருந்தாவிட்டால் நடவடிக்கை நிச்சியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
நிலக்கரி சுரங்க விபத்து- 9 நாட்களுக்கு பிறகு 14 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு