கடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கோ அய்யப்பன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ அய்யப்பன் அவர்கள் கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவர் அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால்,
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அந்த அறிவிப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.