புடாபெஸ்ட்: ஆபரேஷன் கங்காவின் கடைசி கட்ட இந்திய மாணவர் மீட்பு நடைபெற உள்ளதை அடுத்து ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட் நகரின் மையத்திற்கு இந்திய மாணவர்கள் கூட இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே கடந்த 10 நாட்களாக போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை அடுத்து மத்திய மோடி அரசு அங்கு சிக்கியுள்ள 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் பத்திரமாக இந்தியாவுக்கு மீட்பு விமானங்கள் மூலம் கொண்டுவர ஆபரேஷன் கங்கா என்கிற திட்டத்தை உருவாக்கியது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் மீட்பு விமானங்கள் பல உக்ரைனின் அண்டை நாடான ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டுக்குச் சென்று அங்கு இருந்து இந்திய மாணவர்களை மீட்பு விமானங்களில் படிப்படியாக மீட்டு வந்தது. தற்போது பெரும்பான்மையான மாணவர்கள் மீட்கப்பட்டுவிட்ட நிலையில் கடைசி கட்டமாக புடாபெஸ்டின் இந்திய மீட்பு விமானமும் செல்ல உள்ளது.
இதனால் உக்ரைனில் உள்ள அனைத்து மாணவர்களும் புடாபெஸ்ட் மையப்பகுதிக்கு வந்து சேருமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களும் பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்தால் ஆபரேஷன் கங்கா வெற்றிகரமாக நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement