புழல் சிறையில் பணியாற்றி வந்த டாக்டர் நவீன்குமார் பப்ஜி மதனுக்கு உதவியதால் பணி மாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதை அவர் மறுத்துள்ளார்.
புழல் சிறையில் ஏழு ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் நவீன்குமார். பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகைகள் காட்டியதால், அவர் மானாமதுரைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், டாக்டர் நவீன்குமார் தன் மீது ஊடகங்களில் தவறான கருத்துகள் வெளியாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
சிறைத்துறை உயரதிகாரிகளின் சட்டவிரோத செயலுக்கு துணை போக மறுத்ததால் தனக்கு பணியிட மாற்றம் கிடைத்திருப்பதாக விளக்கியுள்ளார். மேலும், கடந்த ஏழு ஆண்டுகளாக சிறைத்துறை உயரதிகாரிகளின் அதிகாரம், பணம், அரசியல் பலம் ஆகியவற்றை எதிர்த்து போராடி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதாக தெரிவித்துள்ளார். இனி போராட சக்தி இல்லை என்பால், சிறைத்துறையை விட்டு மக்கள் பணியாற்ற, அரசு மருத்துவமனைக்கு ஒதுங்கி செல்கிறேன் என கூறியுள்ளார்.
இதையும் படிக்க: நாமக்கல்: தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பேரூராட்சித் தலைவர் என்ன செய்தார் தெரியுமா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM