மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம், சஹரன்பூரில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு பயணிகள் ரயில் டெல்லி நோக்கி புறப்பட்டு சென்றது. ரயில் தவுராலா ரயில் நிலையத்தை சுமார் 7.10க்கு வந்தடைந்த நிலையில் ரயிலின் இரு பெட்டிகள் தீப்பற்றியது. பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறினர். பின்னர், ரயில் நிலை ஊழியர்கள் உதவியுடன் பெட்டியில் இருந்தவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ரயில் பெட்டியில் பரவிய தீயை அணைத்தனர்.