தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தடையை மீறி பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு முதல் மூன்று முறை அபராதம் விதிக்கப்படும் எனவும், அதன்பிறகும் விதிமுறை மீறலில் ஈடுபடுவது தெரியவந்தால் aவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.