புனே:
கடந்த 2016 டிசம்பர் 24 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.
புனே நகர்ப்புறத்தில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்கும் முயற்சியாக இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.
மொத்தம் 32.2 கி.மீ. தூரம் கொண்ட இந்த திட்டத்தில் 12 கி.மீ. தூரத்திற்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.இதையடுத்து கார்வேர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை 11.30 மணி அளவில் நடைபெறும் நிகழ்ச்சியி பங்கேற்கும் பிரதமர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட பின்னர், அங்கிருந்து ஆனந்த்நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரை பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய உள்ளார்.
மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். புனே மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜி மன்னரின் சிலையையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.