பொருளாதாரப் பேரவை ஒன்றை உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண இவ்வாறு பொருளாதாரப் பேரவை உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
பாதுகாப்பு பேரவையைப் போன்று இந்த பொருளாதாரப் பேரவையும் வாராந்தம் கூடி நாட்டின் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு இந்தப் பேரவைக்கு வழங்கப்படும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.