பொருளாதார தடை எதிரொலி- ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் போர் தொடுக்க தொடங்கின.உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது.

சிறிய நகரங்களை ரஷியா பிடித்திருந்தாலும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக உள்ளன. அந்நகரங்களில் தாக்குதல் கடுமையாக இருந்து வருகிறது. ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ரஷியாவின் போர் முடிவால் பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்து அறிவித்துள்ளன.

இதன் எதிரொலியால், ரஷ்யாவில் உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பதுக்கல்களை கட்டுப்படுத்த உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அறிவித்த வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறியதாவது:-

மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் கலாச்சார அபராதங்களால் ரஷியா பாதிக்கப்பட தொடங்கியுள்ளன.  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தனியார் நுகர்வுக்குத் தேவையானதைவிட பல டன்கள் வரை பதுக்கி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சில்லறை விற்பனையாளர்களைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் எந்த நேரத்திலும் தனிநபர்களுக்கு விற்கப்படும் குறிப்பிட்ட பொருட்களின் அளவைக் கட்டுப்படுத்த அனுமதிக்க வேண்டும். வர்த்தக அமைப்புகளின் முயற்சிக்கு தொழில் மற்றும் வர்த்தகம் மற்றும் விவசாய அமைச்சகம் ஆதரித்தன.

ரொட்டி, அரிசி, மாவு, முட்டை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைச்சிகள் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், அரசின் கட்டுப்பாடுகளுக்கு கீழ் உள்ளன.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. 
வடக்கு, மேற்கு பகுதிகளில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய படைகள் நெருங்கியது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.