உக்ரைன்
மீது
ரஷ்யா
போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு படைகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளதால், அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. மேலும், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையான ஜாபோரிஜியா அணு மின் நிலையத்தை கைபெற்றியுள்ளது.
அதேசமயம், உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா., சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா., சபை தங்களால் இயன்ற முயற்சிகளை, செய்து பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது.
உக்ரைன் -ரஷிய போர்…அப்பாவிகள் எவ்வளவு பேர் மரணம்? – ஐநா அதிர்ச்சி தகவல்!
இந்த சூழலில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லை நகரமான கோமலில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இரு நாட்டு பிரநிதிகளும் சில விஷயங்களை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 3ஆம் தேதி இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே 3ஆவது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பும் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து ரஷ்ய வெளீயுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ, “மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. அது உக்ரைனின் கையில் உள்ளது. நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால் உக்ரைன் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதற்கான சாக்குப்போக்குகளை தொடர்ந்து முன்வைக்கிறது.” என்றார். முன்னதாக, தற்காலிகமாக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.