சென்னை:
மெரினா, பட்டினபாக்கம் கடற்கரைகளில் கடல் சீற்றம் காணப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழக கடலோர பகுதியில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால், கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன் ஒரு கட்டமாக நாகை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக இதுவரை 40 வீடுகளுக்கும், 150 தென்னை மரங்களும் அலையில் இழுத்து செல்லப்பட்டுள்ளன.
இதே போன்றும் மெரினா, பட்டினபாக்கம் கடற்கரைகளில் கடல் சீற்றம் காணப்பட்டது. பலத்த காற்றால் கடற்கரையே புழுதி மண்டலமாக மாறியது.