இந்திய கடற்படையை வலுப்படுத்த பல்வேறு ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்திய- ரஷ்ய தொழில் நுட்பத்தில் ஏற்கெனவே சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணைகள் சோதனை வெற்றி பெற்று கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கடற்படை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்திய கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டது. திட்ட மிட்டபடி ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இதன் மூலம் எந்த நேரத்தில் எந்த போரையும் சந்திக்க கடற்படை தயாராக உள்ளது’’ என்று தெரிவித்தனர். -பிடிஐ