கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சில மாவட்டங்களில் மொபைல் இணையம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மார்ச் 7-9, மார்ச் 11-12 மற்றும் மார்ச் 14-16 ஆகிய நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமன செயல்கள் வரும் நாட்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் பெயரில் இந்த நடவடிக்கை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.