கர்நாடகாவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் உள்ள வளாகத்தில் ரூ.81 கோடி மதிப்பில் பிரம்மாண்ட கோளரங்கம் அமைக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம் இன்று அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம் மேலும் கூறியதாவது:-
மைசூரு பல்கலைக்கழகத்தில் உருவாகி வரும் கோளரங்கம் இளம் விஞ்ஞானிகள் பயன்படுத்தும் தரவுகளை நிகழ்நேர அடிப்படையில் பார்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இது கோளரங்கத்தைவிட மேலானது. இந்த திட்டம் மார்ச் 2023-ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்ப்படுகிறது.
லடாக் வானத்தை டெல்லியில் இருந்து பார்க்க முடிந்தால், மைசூரில் இருந்தும் பார்க்க முடியும். அதற்கான தொழில்நுட்பம் நமக்கு உதவுகிறது. வானியற்பியல் தொடர்பான நிகழ் நேரத் தரவுகள் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கும் வகையில் இதுப்போன்ற ஒரு மையம் நாட்டிற்கு தேவை.
இந்த மையத்தில் தற்போதைய தரவு மட்டுமல்ல, கடந்த கால தரவுகளும் மாணவர்களுக்குக் கிடைக்கும். அங்கு சரியான ஆசிரியர்கள், விஞ்ஞானிகளுடன் வழிகாட்டப்பட்ட வழியில் அதைப் பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்தின் முடிவை பார்க்கும்போது, அது ஒரு அற்புதமான உணர்வாக இருக்கும். மாணவர்கள் ஆச்சரியப்படுவார்கள். நீங்கள் அதன் சுவையைப் பெற்றவுடன் ஒரு சிறந்த விஞ்ஞானியாக இருப்பதற்கான சரியான வழியில் உங்களை உருவாக்குவீர்கள்.
மைசூரு ஒரு பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கான இடம் என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. கோ பேக் மோடி- புனேயில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம்