புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கியது. இந்த தேர்தல் திருவிழா, நாளையுடன் முடிகிறது. இந்த தேர்தல் காரணமாக, கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘விரைவாக உங்கள் வாகனங்களின் பெட்ரோல் டேங்கை நிரப்பி விடுங்கள். பிரதமர் மோடி அரசின் தேர்தல் சலுகை விரைவில் முடிவடைகிறது,’ என்று கூறியுள்ளார். அதனுடன், ‘திடீர் உயர்வு’ மற்றும் ‘உங்கள் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கு விரைவில் வருகிறேன்,’ என்ற வாசகத்துடன் பெட்ரோல் பங்க் படத்தையும் பதிவிட்டுள்ளார்.