உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து முன்னேற, ரஷ்யாவில் 56 நகரங்களில் போருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு எதிராக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ரஷ்ய மக்கள் சுமார் 5,000 பேர் இதுவரை கைதாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் 1,700 பேர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 750 பேர் மற்றும் பிற நகரங்களில் 1,061 பேர் கைது செய்யப்பட்டதாக ரஷ்யாவின் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டங்களில் சுமார் 5,200 பேர் கலந்து கொண்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தனியார் அமைப்பு ஒன்று தெரிவிக்கையில், 56 நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களில் சுமார் 4,366 பேர்கள் ரஷ்ய பொலிசாரால் கைதாகியுள்ள குறிப்பிட்டுள்ளனர்.
கடைசியாக கடந்த ஜனவரி 2021ல் பொதுமக்கள் திரண்டு விளாடிமிர் புடின் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இதே எண்ணிக்கையில் கைதாகினர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பியபோது அவருக்கு ஆதரவாக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அவரை விடுவிக்கக் கோரினர்.
தற்போது உக்ரைன் போருக்கு எதிராக திரண்ட மக்களை ரஷ்ய பொலிசார் கொடூரமாக எதிர்கொண்டதாகவும், கைதானவர்கள் நிலை தொடர்பில் தகவல் ஏதும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.