உக்ரைனில் போர் ஆரம்பித்தது முதல் ரஷ்யா 88 விமானங்கள் மற்றும் உலங்கு வானுார்திகளை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்போது பல ரஷ்ய விமானிகள் பிடிபட்டுள்ளதாகவும் உக்ரைனின் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனின் ஆயுதப் படைகள் தென்கிழக்கில் உள்ள முக்கிய துறைமுக நகரமான மரியுபோலைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன.
இந்தநிலையில் கணிசமான அளவு” ரஷ்ய ஆயுதங்கள் மைகோலேவ் பகுதியில் கைப்பற்றப்பட்டன.
தற்போதைய நிலையில் உக்ரைனின் எதிர்ப்பின் வலிமையால் ரஷ்ய வீரர்கள் மனச்சோர்வடைந்துள்ளனர் என்றும் உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை உக்ரைனிய படைகளால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய சில விபரங்களை ரஷ்யா வழங்கியுள்ளது,
எனினும் உக்ரேனிய எதிர்ப்பின் வலிமையைக் கண்டு ரஷ்யா வியப்படைந்துள்ளதாகவும், விநியோக மார்க்கங்கள் மற்றும் துருப்புக்களின் மன உறுதியில் ரஷ்யா சிக்கலைச் சந்தித்துள்ளதாகவும் இராணுவ வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.