வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
3 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழக்கிறது
அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை மையம் தகவல்
தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கு வடகிழக்கு திசையில் 310 கிலோ மீட்டர் தொலையில் மையம்
நாகைக்கு கிழக்கு வட கிழக்கு திசையில் 260 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது
சென்னை, புதுச்சேரிக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 280 கிலோ மீட்டர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்
வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்
படிப்படியாக வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும் என தகவல்