15,900 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்: மத்திய அரசு| Dinamalar

புதுடில்லி: உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து கடந்த 22ம் தேதி முதல் தற்போது வரை 15,900 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ், இன்று மட்டும் 11 சிறப்பு விமானங்கள் மூலம், உக்ரைன் அண்டை நாடுகளில் இருந்து 2,135 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கடந்த 22 முதல், 15,900 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர். நாளை 8 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதில் 5 புடாபெஸ்ட், 2 விமானங்கள் சுசெவா மற்றும் புகாரெஸ்ட் நகருக்கு ஒரு விமானம் இயக்கப்பட்டு 1500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தங்களது மொபைல் எண் மற்றும் இருப்பிடத்தை பகிருமாறு தெரிவித்துள்ளது.
ஹங்கேரியில் உள்ள இந்திய தூதரகம் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் இந்தியர்களை மீட்கும் கடைசி கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தூதரகம் ஏற்பாடு செய்யாமல், சொந்த செலவில் தங்கி உள்ளவர்கள் அனைவரும் தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஹங்கேரியில் உதவி மையம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்பதற்காக ஹங்கேரி தலைநகரில் புடாபெஸ்ட்டில், உதவி மையத்தை இந்திய தூதரகத்தை ஏற்பாடு செய்துள்ளது.

ஹங்கேரியில் உள்ள சிறப்பு அதிகாரி ராஜிவ் போட்வாடே கூறுகையில், ஹங்கேரி-உக்ரைன் எல்லையில் எத்தனை இந்தியர்கள் எல்லையை கடக்கிறார்கள், தங்குமிடம், போக்குவரத்து போன்றவற்றை மற்ற குழுக்கள் கவனித்து வருகின்றன. 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள் என தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.