உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது உலக நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பணவீக்கத்தினை தூண்டி வருகின்றது.
இதனால் சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியினை காணலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையும் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
130 டாலரை தொட்ட கச்சா எண்ணெய் விலை.. தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..?!
இந்தியாவுக்கு அதிக பாதிப்பு
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் முன்னணி நாடாக இருக்கும் இந்தியா, பெரிதும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது ஒரு காரணம் எனில் மறுபுறம் அமெரிக்கா கனடா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெக்கு தடை செய்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.
4வது நாளாக தொடர்ந்து சரிவு
ஆனால் தேவை அதிகம் உள்ள இந்த நேரத்தில் உற்பத்தியானது குறைவாகவே இருந்து வருகின்றது. இதனால் விலை தொடர்ந்து அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து 4வது நாளாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது. தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 77 ரூபாய்க்கு அருகில் வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது.
தற்போது நிலவரம்
தற்போது கிட்டதட்ட 10.43 மணி நிலவரப்படி 1% சரிவினைக் கண்டு 76.8875 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் 76.42 ரூபாயாக முடிவடைந்திருந்த நிலையில், இன்ற தொடக்கத்தில் 75.886 ரூபாயாக தொடங்கியது. எனினும் தற்போது கிட்டதட்ட 77 ரூபாய் என்ற லெவலுவுக்கு சரிவினைக் கண்டு காணப்படுகிறது.
வரலாறு காணாத சரிவு
பல நாடுகளும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதியினை தடை செய்து வருகின்றன. இது எண்ணெய் விலையை இன்னும் தூண்டும் விதமாக அமையலாம். இது ஓபெக் உற்பத்தியினை அதிகரித்தால் மட்டுமே விலையை கட்டுக்குள் வைக்க முடியும் என்ற நிலை இருந்து வருகின்றது. இந்தியா அதிகளவு இறக்குமதியினை செய்யும் நாடாக இருப்பதால், அதிக அன்னிய செலவாணி ஏற்படலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவும் சரிவினைக் கண்டு வருகின்றது.
indian rupee trades at record low nearly Rs.77 amid crude oil prices jump
indian rupee trades at record low nearly Rs.77 amid crude oil prices jump/அதல பாதாளத்தில் இந்திய ரூபாய்.. வரலாறு காணாத சரிவு.. மீள வழி இருக்கா?