பள்ளிப்பட்டு அருகே மூன்று காட்டு யானைகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்தன. வனத்துறை மற்றும் காவல்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஈச்சம்பாடி என்ற தமிழக எல்லையின் அருகில்ஆந்திர மாநில வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து மூன்று காட்டு யானைகள் நேற்று மாலை முதல் முகாமிட்டு கரும்புத் தோட்டங்கள் மற்றும் விவசாய தோட்டங்களை சீரழித்து வருகிறது. இந்த காட்டு யானைகளால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கரும்பு தோட்டத்தின் விவசாயி லோகநாதன் மற்றும் முரளி ஆகியோர் கரும்பு தோட்டம் மிகவும் சேதம் அடைந்து உள்ளதாக அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினரும் வனத்துறை அதிகாரிகள், ட்ரோன் கேமரா மூலம் காட்டு யானைகளை கரும்புத் தோட்டத்திற்குள் எங்கே உள்ளது என்று கண்டறிந்த பட்டாசு வெடித்தும் மேளம் அடித்து காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், கரும்புத் தோட்டத்திலிருந்து யானைகள் வெளியே வராமல் உள்ளே இருப்பதால் சுமார் ஏழு மணி நேரமாக போராடி வருகின்றனர். இதனால் தொடர்ந்து பொதுமக்கள் அந்த பகுதியில் அச்சமடைந்துள்ளனர். விரைவாக தமிழக அரசும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், இந்த காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM