டெல்லி: இந்தியர்கள் மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக 35 நிமிடம் பேசினார். உக்ரைனில் நிலவிவரும் சூழல் தொடர்பாக செலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி சுமார் 35 நிமிடங்கள் பேசினார். இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றியதற்காக உக்ரைன் அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி கூறினார். சுமியின் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உக்ரைன் அதிபர் தொடர்ந்து உதவ பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருக்கிறார்.