உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில், பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பல தடைகளை விதித்துள்ளன.
இதனால் தங்களுக்கு நஷ்டம் என ரஷ்யா கூறாவிட்டாலும், நிச்சயம் இழப்பு தான். ஏனெனில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் வணிகத்தில் முன்னணி நாடாக இருந்து வரும் ரஷ்யாவின் மீதான பொருளாதார தடை, கச்சா எண்ணெய் தடை உள்ளிட்ட பலவற்றால் பெரும் இழப்பு தான்.
குறிப்பாக இவ்விரு நாடுகளுக்கு இடையேடான பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்ய நிறுவனங்களுடனான வணிக உறவுகளை பல்வேறு நிறுவனங்கள் முறித்துக் கொண்டு வருகின்றன.
எண்ணெய் எரிகிறது, ரூபாய் சரிகிறது.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?!
நடு நிலையான இந்தியா
இந்த நிலையில் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் பலவும் பலத்த சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தங்களது மெலிந்து போன வணிகத்தினை மேம்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ரஷ்யாவுக்கு நட்பு நாடாக இருந்து வரும் இந்தியா, இப்பிரச்சனைக்கும் மத்தியிலும் போரை கைவிடுங்கள் என்று நடு நிலையாகவே இருந்து வருகின்றது.
இந்தியாவுக்கு சலுகை
இதற்கிடையில் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவுக்கு எண்ணெய் இறக்குமதி செய்யவும், அதனை 25 – 27% தள்ளுபடி விலையில் கொடுக்கவும் அணுகவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உண்மையில் இது இந்தியாவுக்கு கிடைத்த மிக நல்ல வாய்ப்பே. எனினும் முன்னதாக அதிகளவில் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இந்தியா, அமெரிக்காவின் பொருளாதார தடையால் தற்போது சவுதியிடம் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது.
என்ன செய்யப் போகிறது இந்தியா?
இந்த நிலையில் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது தடை விதித்துள்ளன. இந்த நெருக்கடியான நிலையில் ரஷ்யா இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமா? அல்லது நடப்பது நடக்கட்டுமென ரஷ்யாவுடனான வணிக உறவினை இன்னும் மேம்படுத்திக் கொள்ளுமா? என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.
எவ்வளவு சலுகை?
இது குறித்து வெளியான செய்தியறிக்கையில் ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 27% வரையில் சலுகை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்தான டெண்டரும் இந்த வாரத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் இதனை ஏற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயன்படுத்திக் கொள்ளுமா?
ஏற்கனவே சவுதியிடம் அதிக சப்ளை கேட்ட நிலையில், அங்கு கிடைக்காதபட்ச மாற்று வழிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் அணுகி வந்தது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமா?
குறிப்பாக விட்டோல் குழுமம் ஒரு பேரலுக்கு 7 டாலர்களுக்கு மேலாக குறைவாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. மொத்தத்தில் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு இது நல்ல வாய்ப்பு தான். அதேசமயம் பொருளாதார தடைகள் பற்றிய அச்சமும் இருந்து வருகின்றது.
Russian oil firms offer huge discounts to India
Russian oil firms offer huge discounts to India/இந்தியாவுக்கு 27% வரை தள்ளுபடி.. ரஷ்ய நிறுவனங்கள் கொடுக்கும் ஆஃபர்..பலன் கிடைக்குமா?