இந்திய அமைச்சர் பேசியது விளம்பர உரையாகவே இருந்தது: வைரல் வீடியோவுக்கு ருமேனிய மேயர் விளக்கம்

புதுடெல்லி: ”இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் பேச்சு, விளம்பர உரையாகவே இருந்தது” என்று ருமேனிய மேயர் கூறியுள்ளார்.

உக்ரைனிலிருந்து தப்பி ருமேனியாவுக்கு வந்த இந்திய மாணவர்களை தாயகத்துக்கு அழைத்து வருவது தொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிந்தியா பேசிக்கொண்டிருக்கும்போது, ருமேனிய மேயர் ஹாங்கில் குறுக்கிட்டுப் பேசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இந்த நிலையில், ருமேனியாவின் ஸ்னாகோவ் பிராந்திய மேயர், ஹாங்கில் அளித்த பேட்டியில் ஒன்றி அதுகுறுத்து கூறும்போது, “போர் காரணமாக உக்ரைனிலிருந்து தப்பித்து 157 இந்திய மாணவர்கள் ஸ்னாகோவ் பிராந்தியத்துக்கு வந்தனர். இந்தியத் தூதரகம் மூலம் அந்த மாணவர்களுக்கு சிறிய உதவி கிடைத்தது. உணவு மற்றும் பிற தேவைகள் அனைத்தும் எங்களால் வழங்கப்பட்டன. ஸ்னாகோவ் பிராந்தியத்தின் குடிமக்களே அனைத்தையும் மாணவர்களுக்கு வழங்கினர். இந்த நிலையில், மாலையில் ஒருவர் (மத்திய அமைச்சர் சிந்தியா) அறைக்கு கேமராக்களுடன் வருகை தந்தார்.

அவர் மாணவர்களிடம் மிகவும் மூர்க்கத்தனமான தொனியில் பேசுவதைக் கண்டேன். அவர் தனது விளம்பர உரையைத் தொடங்கினார். அவர் போர் பூமியை விட்டு வெளியேறி வீட்டிற்குச் செல்ல விரும்பிய மாணவர்களுக்கு ஆறுதலாக எந்த வார்த்தையும் கூறவில்லை.

அவர் ஒரு விளம்பர உரையை முன்வைக்கத் தயாராக இருந்தார், போரிலிருந்து வெளியேறி வீட்டிற்குச் செல்ல விரும்பிய மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை.” என்று விளக்கம் அளித்தார்

இது தொடர்பாக, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறும்போது, ”மாணவர்கள் மிகவும் கடினமான பயணத்தை மேற்கொண்டிருந்தனர். சில பயங்களும் சில கவலைகளும் அவர்களுக்கு இருக்கும். அதைத்தான் ருமேனிய மேயர் வெளிப்படுத்தியிருக்கிறார்… பரவாயில்லை. அந்த மாணவர்களின் கவலைகளைத் தணிக்க நான் இருக்கிறேன். இந்தியாவின் பிரதிநிதியாக, நாம் பாடுபட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.