கடந்த சில காலாண்டுகளுக்கு முன்பு வரையில் ஐடி துறையானது மிகப் பெரியளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. வளர்ச்சி விகிதமானது கொரோனாவுக்கு முன்பை விட உச்சத்தினை எட்டியுள்ளது.
இதற்கிடையில் பணியமர்த்தல் விகிதமானது கணிசமாக உச்சத்தினை எட்டியுள்ளது. இதனால் திறன் மிகுந்த ஊழியர்களுக்கு தேவையானது அதிகமாக உள்ளது.
இதற்கிடையில் இந்திய ஐடி நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு சிறந்த போட்டியாளராக இருந்து வருகின்றது.
ஜிஎஸ்டியால் என்ன பிரச்சனை.. சிறு தொழில்களுக்கு என்ன பாதிப்பு.. !
கணிசமான வளர்ச்சி
கடந்த இரண்டு தசாப்தங்களில் ஐடி நிறுவனங்கள் மிகப் பெரிய வளர்ச்சியினை கண்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஐடி துறையானது கருதப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% பங்களிக்கிறது. சொல்லப்போனால் நாட்டின் முன்னணி வணிகங்களில் ஒன்றாக உள்ளது.
இன்ஃபோசிஸ்
அந்த வகையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் உள்ளன. இது நாட்டின் முதல் 4 நிறுவனங்களில் உள்ளன.
இதில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 4 தசாப்த கால அனுபவத்துடன் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
இன்ஃபோசிஸின் செயல்பாடு
இது நிதிச் சேவைகள், சில்லறை விற்பனை, தகவல் தொழில் நுட்ப, ரீடெயில், கம்யூனிகேஷன், எனர்ஜி மற்றும் பயன்பாடுகள் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.
இது மட்டும் அல்ல, செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், பிளாக் செயின் மற்றும் மெட்டாவர்ஸ் போன்ற வளர்ந்து வரும் துறைகளிலும் நிறுவனம் குறிப்பிடத்தக்க இருப்பை கொண்டுள்ளது.
விப்ரோ
விப்ரோ நிறுவனம் சர்வதேச அளவில் சேவை செய்து வரும் ஒரு முன்னணி ஐடி நிறுவனமாகும். இது ஐடி சேவைகள், ஐடி பொருட்கள் மற்றும் ஸ்டேட் ரன் எண்டர்பிரைசஸ் என்ற மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட சேவைகளை வழங்குகிறது.
இந்த நிறுவனம் வங்கி சேவைகள், சுகாதாரம், எனர்ஜி மற்றும் உற்பத்தி துறை சார்ந்த துறைகளில் சேவை செய்து வருகின்றது.
இன்ஃபோசிஸ் சேவை
இன்ஃபோசிஸ் நிறுவனம் டிஜிட்டல் மார்கெட்டிங், டிஜிட்டல் காமர்ஸ், டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ், மெட்டாவெர்ஸ், அப்ளைடு AI, டேட்டா அனலிடிக்ஸ், பிளாக்செயின், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், சாப், ஆரக்கிள், கிளவுட், டிஜிட்டல் சப்ளை செயின், சைபர் செக்யூரிட்டி, டெஸ்டிங், அப்ளிகேஷன் மாடர்னைசேஷன், ஏபிஐ எக்னாமி & மைக்ரோசர்வீசஸ், கன்சல்டிங், அப்ளிகேஷன் டெவலப்மென்ட் உள்ளிட்ட பல சேவைகளை செய்து வருகின்றது.
விப்ரோவின் சேவை
இதே விப்ரோ நிறுவனம் டேட்டா, அனலிடிக்ஸ் & AI, அப்ளிகேஷன்ஸ், கன்சல்டிங், உள்கட்டமைப்பு சேவை, டிஜிட்டல் ஆப்ரேஷன்ஸ் & பிளார்ட்பார்ம்ஸ், பிளாக்செயின், சைபர் செக்யூரிட்டீஸ் & எண்டர்பிரைசஸ் ரிஸ்க், DevOps, எண்டர்பிரைஸ் Ops டிரான்ஸ்பர்மேஷன், ப்ராடக்ட் லைஃப்சைக்கிள் மேனேஜ்மென்ட், சாப்ட்வேர் சேவைகளை செய்து வருகின்றது.
முக்கிய வணிக இடங்கள்
ஃபைனான்ஷியல் சர்வீசஸ் & இன்சூரன்ஸ், லைஃப் சயின்ஸ் & ஹெல்த்கேர், ரீடெயில், கன்சியூமர் பேக்கேஜ்டு, கம்யூனிகேஷன்ஸ், டெலிகாம், OEM மற்றும் மீடியா, உற்பத்தி, ஹைடெக்.
வங்கி துறைகள், நிதித்துறை & இன்சூரன்ஸ், கன்சியூமர் பிசினஸ், கன்சியூமர்ஸ் பிசினஸ், எனர்ஜி, உற்பத்தி துறை, டெக்னாலஜி, கம்யூனிகேஷன்ஸ், நேச்சுரல் ரீசோர்சஸ் & பயன்பாடுகள்.
தற்போதைய பங்கு விலவரம்?
விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது முடிவில் 0.60% குறைந்து, 571.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 579.65 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச 562.25 ரூபாயாக இருக்கும்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, 0.96% அதிகரித்து, 1739.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 1751 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 1696 ரூபாயாகும்.
infosys Vs Wipro: which IT stock is best to buy?
infosys Vs Wipro: which IT stock is best to buy?/இன்ஃபோசிஸ் Vs விப்ரோ: எந்த பங்கு சிறந்தது? எதை வாங்கி போடலாம்?