துபாய்,
இன்று நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா -இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதன்படி 86 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் உள்ளது. 75 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் , 66 சதவீத வெற்றியுடன் இலங்கை அணி 3-வது இடத்திலும் உள்ளது.
60 சதவீத வெற்றியுடன் தென் ஆப்பிரிக்க அணி 4-வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்றதன் மூலம் 54 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 5-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. 38 சதவீத வெற்றியுடன் நியூசிலாந்து அணி 6-வது இடத்திலும் உள்ளது.