உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கோபத்துடன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 12வது நாளாக தொடர்கிறது.
பொதுவாக மீடியா பேட்டிகளில் போருக்கு இடையிலும் அன்பாக பேச கூடியவர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. ஆனால் அவர் இன்று காலை கொடுத்த பேட்டியில் ஆக்ரோஷமாக காணப்பட்டார். காரணம்.. ஒரு குடும்பம்.
உக்ரைன் கீவ் வெளியே இருக்கும் சின்ன கிராமம் லிர்ப்பின். நேற்று இரவு இங்கிருந்து 20 பேர் வரை வெளியேற முயன்று உள்ளனர். அங்கு பெரிய அளவில் உக்ரைன் பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. பெரிய அளவில் இல்லை 12 உக்ரைன் வீரர்கள் மட்டுமே அந்த எல்லை பகுதியை காத்துகொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு இருக்கும் பாலத்திற்கு இன்னொரு பக்கம் ரஷ்ய படைகள் வந்துள்ளது. இந்த ரஷ்ய படைகள் மிக வேகமாக செயல்பட்டு, பாலத்தில் இருந்து துப்பாக்கிகள் மூலம் சரமாரியாக தாக்கி உள்ளனர். அதேபோல் குண்டுகளை வீசியும் இந்த பக்கம் இருந்தவர்களை தாக்கி உள்ளனர்.
இதை உக்ரைன் வீரர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பாலத்தில் வைத்து தாக்குதல் பாலத்திற்கு வந்த ரஷ்ய படைகள் மிக கொடூரமாக தொடர்ந்து தாக்கி உள்ளனர். ராணுவத்தினரை குறி வைக்காமல் பொது மக்களை குறி வைத்து ரஷ்யா தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அந்த தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ளனர்.
இவர்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இந்த குடும்பத்தின் மரணம் பற்றித்தான் இன்று காலை செய்தியாளர் சந்திப்பில் ஜெலன்ஸ்கி மிக கோபமாக பேசினார்.
அந்த குடும்பம் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவே முயன்றனர். அவர்கள் என்ன தவறு செய்தனர். அவர்களை ஏன் ரஷ்ய ராணுவம் கொல்ல வேண்டும். என்ன கொடுமை இது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி பல குடும்பங்களை அவர்கள் கொன்று உள்ளனர்.
அவர்கள் நான் சும்மா விட மாட்டேன்.
இந்த போரில் தவறு செய்த எல்லோரையும் நான் தேடி பிடித்து தண்டனை கொடுப்பேன். அவர்களுக்கு இனி இந்த உலகில் நிம்மதியான இடம் என்று எதுவும் கிடையாது. அவர்களுக்கு கல்லறை மட்டுமே நிம்மதியான இடம். அங்கே அவர்களை அனுப்பாமல் விட மாட்டேன் என பேசியுள்ளார்