புதுடெல்லி:
உக்ரைன், ரஷியா இடையே 10 நாளுக்கும் மேலாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரனை போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். சிறப்பு விமானங்களில் இதுவரை 15,920 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, உக்ரைனில் வேன் ஒன்றில் 3 பேருடன் சென்ற இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் என்பவர் சில நாட்களுக்கு முன் சோதனை சாவடி பகுதியருகே துப்பாக்கியால் சுடப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், கீவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கீவ் நகரில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றும் பாஸ்போர்ட்டை தொலைத்த இந்தியரான ஹர்ஜோத் சிங் இன்று இந்தியா திரும்புவார் என மத்திய மந்திரி வி.கே.சிங் டுவிட்டர் செய்தியில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து 4 பேர் பலி