உக்ரைனுக்கு சீனாவின் செஞ்சிலுவை சங்கம் மனிதாபிமான உதவுகளை வழங்கும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் Wang Yi அறிவித்துள்ளார்.
சீனப் பாராளுமன்றத்தின் வருடாந்தக் கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த Wang Yi, உக்ரைன் நிலைமைக்கான காரணங்கள் சிக்கலானவை மற்றும் ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவல்ல என கூறினார்.
சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைதியும் பகுத்தறிவும் தான் தேவை, அதை விட்டுவிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக் கூடாது.
சீன ஏற்கனவே அமைதி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதற்கான சில பணிகளை முன்னெடுத்துவிட்டது மற்றும் அனைத்து தரப்பினருடனும் தொடர்பில் உள்ளது.
மனிதாபிமான நெருக்கடிகளை தீர்க்க சொந்த முன்னெடுப்புகளை எடுக்க சீன தயாராக உள்ளது மற்றும் நாட்டின் செஞ்சிலுவை சங்கம் விரைவில் ஒரு உதவி தொகுப்பை உக்ரைனுக்கு வழங்கும் என Wang Yi கூறினார்.
அதேசமயம், சீனா-ரஷ்யா இடையேயான நட்புறவு மிக உறுதியாக இருப்பதாகவும், ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருப்பதாக Wang Yi கூறினார்.
மேலும், உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை கண்டிக்கவோ அல்லது படையெடுப்பு என அழைக்கவோ மறுத்த சீனா, பாதுகாப்பு குறித்த ரஷ்யாவின் கவலைகளுக்கு மேற்கத்திய நாடுகள் மதிப்பளிக்குமாறு கோரியுள்ளது.