லண்டன்: உக்ரைன் அகதிகள் பிரிட்டனுக்கு தஞ்சம் புக, விசா கட்டுப்பாடுகளில் எந்த தளர்வும் இல்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர் 12-வது நாளைத் தாண்டி 13 வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது இருநாடுகளிடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் கிட்டதட்ட 15 லட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பெலாரஸ், போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் நடை பயணமாகவே சென்று அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள நிலையில் சில உக்ரைன் அகதிகள் பிரிட்டனில் தஞ்சம் புக விரும்புகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுக்கு பிரிட்டனில் வாழ்வு அளிக்கப்படும். ஆனால் அதே சமயத்தில் விசா கட்டுப்பாடுகள் எந்த வகையிலும் தளர்த்தப்படாது என கட்டாயமாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் தரத்தை நிலைநிறுத்த உக்ரைன் அகதிகல் பிரிட்டனின் விசா கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அகதிகளுக்கு இடம் அளிப்பது தொடர்பாக தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் அகதிகளாக தஞ்சம் புகுபவர்களுக்கு அடையாளம் வேண்டும் என்றும் அடையாளம் தெரியாத நபர்களை பிரிட்டனுக்குள் அனுமதிப்பது நல்லதல்ல என்றும் ஒரு ஜான்சன் கூறியுள்ளார்.
மேலும் ரஷ்யாவுக்கு பிரிட்டன் அரசு, உலக தலைவர்களின் கருத்து கேட்புக் பின்னர் மேலும் பல்வேறு தடை உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement