உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பதட்டங்கள் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகின்றன, உலகெங்கிலும் உள்ள நாடுகள் இந்த பிரச்சினையில் தனித்துவமான நிலைப்பாட்டை எடுக்கின்றன. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரில் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன.
ரஷ்யா அல்லது உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் வெளிப்படையாக ஆதரவு ஏதும் அளிக்காமல் இருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவும் ரஷ்யாவுக்கும் சர்வதேச உறவுகள் நாலல் நிலையில் உள்ள நிலையில், வரும் காலத்தில் சிறிது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பலர் ஊகிக்கின்றனர்.
ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் சனிக்கிழமையன்று, உக்ரைனின் தற்போதைய நெருக்கடி ரஷ்யா-இந்தியா உறவுகள் உட்பட உலக நாடுகள் உடனான உறவில் ஏற்பட்டுத்தும் தாக்கத்தின் அளவை இப்போது கற்பனை செய்ய முடியாது என்றும் கூறினார்.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!
உக்ரைன் போரின் தாக்கம் சர்வதேச உறவுகளில் கடுமையாக இருந்தாலும், மேலை நாடுகள் ரஷ்யாவுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டதால், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பு என்று ரஷ்ய தூதர் மேலும் கூறினார்.
வர்த்தகம் மற்றும் வணிகம் என்று வரும்போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெறக்கூடும் என்பதே இதன் பொருள். முன்னதாக, உக்ரைனில் உள்ள சூழ்நிலையால் இந்தியாவுடனான S-400 ஏவுகணை ஒப்பந்தம் பாதிக்கப்படாது என்று ரஷ்ய தூதர் மேலும் கூறியிருந்தார்.
தற்போதைய போருக்கு மத்தியில் இந்த சூழ்நிலையில் தலையிடுமாறு உக்ரைன் அரசாங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், ரஷ்ய அதிகாரிகள், சர்வதேச நிலையில், இந்திய அரசாங்கம் எடுத்துள்ள நடுநிலையை முன்னர் பாராட்டினர்.
ரஷ்ய படையெடுப்பின் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் உக்ரைனுடனும் நல்ல உறவைப் பேணி வருகிறது, ஏனெனில் இரு நாடுகளுடனும் ஒன்றிணைந்து செயல் பட்டு வரும் இந்தியா, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை வெளியேற்றி வருகிறது. மேலும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில், ரஷ்யா, இந்திய மக்களை வெளியேற்ற உதவ தற்காலிமாக சில மணி நேரங்களுக்கு தாக்குதலை நிறுத்தி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய நெருக்கடியில் போராடி வரும் உக்ரைனுக்கு இந்தியாவும் மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகிய இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் உறவுகளைப் பேணும் வகையில், இரு நாடுகளுடனும் உறவுகளைத் துண்டிக்காமல் இருக்க இந்தியா தனது பங்கைச் செய்து வருகிறது. இன்றும் கூட பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகிய இருவருடன் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பிப்ரவரி கடைசி வாரத்தில் தொடங்கியது. அதன் பிறகு பல நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் அந்நாட்டை வெளிப்படையாகக் கண்டித்து, ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை குறிவைத்து பல தடைகளை விதிக்க முடிவு செய்தன.
மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்