ரஷ்யா தனது படையெடுப்பை தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கெய்வை மாஸ்கோ கைப்பற்றுவதற்கு உதவ, நகர்ப்புற போர்களில் ஈடுபட பயிற்சி பெற்ற சிரியர்களை ஈடுபடுத்துவதாக, சில அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
WSJ பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில், 2015 முதல் சிரியாவில் இயங்கி வரும் ரஷ்யா, உக்ர்ரேனை கைபற்றும் போரில் உதவ அங்கிருந்து போராளிகளை அழைத்து வருகிறது என்பதைக் குறிக்கிறது.
புடின் இதுவரை எவ்வளவு பேரை ஈடுபடுத்தியுள்ளார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சிலர் ஏற்கனவே ரஷ்யாவில் இருப்பதாகவும், விரைவில் உக்ரைனுக்கு எதிரான போரில் நுழையத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று WSJ தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரில் ஈடுபட விரும்பும் சிரியா நாட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு $200 முதல் $300 வரை வழங்கியுள்ளது என்று WSJ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!
உக்ரேனுக்கு எதிரான போரில் பங்கேற்க செச்சென் குடியரசு உட்பட மற்ற நாடுகளைச் சேர்ந்த ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் WSJ அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கிடையில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் திங்கள்கிழமை (மார்ச் 7) அதன் 12 வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய துருப்புக்கள் ஷெல் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் உக்ரைனின் இர்பினில் இருந்து மக்கள் வெளியேற்றப்படும் நிலையில் சிவிலியன்கள் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 360க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உக்ரைனில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் (OHCHR) ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், 1,123 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர், இதில் 364 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 759 பேர் காயமடைந்துள்ளனர், OHCHR கூறியது, உண்மையான புள்ளிவிவரங்கள் “கணிசமான அளவிற்கு அதிகமாக” இருக்கும் என்றும் ஒப்புக்கொண்டது.
படையெடுப்புக்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 1.2 மில்லியனைத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்