உத்தரப் பிரதேசத்தின் 9 மாவட்டங்களில் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்டமாக இன்று 9 மாவட்டங்களில் 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசி, சமாஜ்வாதிக் கட்சியின் வலுக்கோட்டையான ஆசம்கர் ஆகியன இவற்றில் அடங்கும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாநிலக் காவல் துறையினருடன் மத்தியத் துணைராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
நரோலியில் வாக்களித்த மாநில அமைச்சர் ரவீந்திர ஜெய்ஸ்வால், பாஜக 350க்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.