403 இடங்களை கொண்ட உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மூன்று இடங்களில் மட்டும் காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெறும். மற்ற இடங்களில் மாலை 6 மணி தேர்தல் நடைபெறுகிறது. 54 இடங்களில் 613 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பிரதமர் மோடியின் எம்.பி. தொகுதியான வாரணாசியில் இன்று வாக்குப்பதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
காலை 11 மணி நிலவரப்படி 21.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அசாம்கார் மாவட்டத்தில் 20.06 சதவீதம், போதாஹி மாவட்டத்தில் 22.26 சதவீதம், சண்டௌலியில் 23.51 சதவீதம், காசிபூரில் 20.05 சதவீதம், ஜான்பூரில் 21.83 சதவீதம், மாவ் மாவட்டத்தில் 24.69 சதவீதம், மிர்சாபூரில் 23.45 சதவீதம், சோன்பத்தராவில் 19.45 சதவீதம், வாரணாசியில் 21.19 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதையும் படியுங்கள்… உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ‘இரும்பு ஆட்சி’ அமைக்கும் நேரம் வந்துவிட்டது- மாயாவதி