லக்னோ:
உத்தர பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
அசம்கார், மாவ், ஜான்பூர், காஜிப்பூர், சண்டாலி, வாரணாசி, மிர்சாபூர், பதோகி மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது.
மொத்தம் 613 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்களது அரசியல் எதிர்காலத்தை 2.06 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 10-ந்தேதி எண்ணப்படுகின்றன.
மேலும், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் தேர்தலில் பதிவான வாக்குகளும் அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படியுங்கள்…பி.எஸ்.எப்.வீரர்கள் மீது சக வீரர் துப்பாக்கிச் சூடு- 5 பேர் உயிரிழப்பு