மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் மதிப்பு இன்று ஒரு நாளில் மட்டும் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1491.06 புள்ளிகள் சரிந்து 52,842.75 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 382.20 புள்ளிகள் சரிந்து 15,863.15 புள்ளிகளையும் அடைந்துள்ளது.
இன்றைய சரிவுக்கு என்ன காரணம்..? இந்தக் கடுமையான காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?
சூப்பர் சான்ஸ்.. ரூ.490 டிவிடெண்ட்.. பங்கு விலையும் அதிகரிக்கலாமாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
முக்கியக் காரணங்கள்
ரஷ்யா உக்ரைன் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் உடன் இணைந்து ரஷ்யா கச்சா எண்ணெய்க்குத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருகிறது, இதன் வாயிலாகக் கச்சா எண்ணெய் விலை 130 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
அமெரிக்கா
மேலும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி உயர்வு குறித்த பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. மேலும் அமெரிக்காவின் வலிமையான வேலைவாய்ப்புத் தரவுகள் வட்டி விகித உயர்வுக்கு வலிமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர்
ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகிதம் உயர்வு தான் அடிப்படை காரணம் மற்ற அனைத்தும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளாகும். இதன் எதிரொலியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை இன்று இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை
கச்சா எண்ணெய் விலை உயர்வும் இந்திய சந்தையை அதிகளவில் பாதிக்கும் என்பதால் கச்சா எண்ணெய் விலை 130 டாலரை தொட்ட பின்பு மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் துவங்கியதில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிதியியல், ஐடி, கன்ஸ்யூமர் பொருட்கள் சார்ந்த நிறுவனங்கள் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்தனர்.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீடு இன்ற அதிகப்படியாக 1966.71 புள்ளிகள் வரையில் சரிந்தது. ஆசியச் சந்தையில் பல முக்கிய நாடுகளின் பங்குச்சந்தை 3 சதவீதம் வரையில் சரிந்தது போலவே மும்பை பங்குச்சந்தையும் 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கிய பிப்ரவரி 24ஆம் தேதி முதல் சென்செக்ஸ் 7.66 சதவீதம் சரிந்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 76.96 ஆகச் சரிந்துள்ளது. இந்தச் சரிவுக்கு மிகமுக்கிய காரணம் கச்சா எண்ணெய் விலையும், பங்குச்சந்தையில் இருந்து தொடர்ந்து வெளியேறி வரும் அன்னிய முதலீடுகளும் தான். இந்த நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டுத் திட்டத்தை வைத்திருந்தால் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும், இல்லையெனில் சந்தையின் தடுமாற்றம் மற்றும் வரத்தகத்தை ஆய்வு செய்து நீண்ட கால முதலீட்டை ஆய்வு செய்து தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள்
மேலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை சரிவைக் கண்டு பயப்பட்டு முதலீட்டை நிறுத்தாமல் தொடர்ந்து SIP வாயிலாகச் செய்யப்படும் திட்டங்களைத் தொடர வேண்டும் என்றும் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏன் தெரியுமா..?!
தரமான பங்குகள்
மும்பை பங்குச்சந்தையில் தற்போது ஏற்பட்டு உள்ள இந்தப் பெரிய திருத்தம் மூலம் முதலீட்டாளர்களுக்கு நல்ல தரமான பங்குகளைக் கவர்ச்சிகரமான விலையில் வாங்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதேபோன்ற நிலைதான் கொரோனா தொற்றின் போதுஏ ஏற்பட்டது.
லாக்டவுன்
இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது நடந்தது. இந்தச் சரிவில் முதலீடு செய்த அனைவருக்கும் அதிகப்படியான லாபம் கிடைத்தது மறக்க முடியாது. இதேபோலத் தான் இந்தச் சரிவையும் பார்க்க வேண்டும். ஆனால் 130 டாலருக்கு உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலையின் தாக்கத்தை முதலீட்டாளர்கள் மறந்துவிடக் கூடாது.
crude oil boiling, Rupee falling, Stocks on red: What Investor need do?
crude oil boiling, Rupee falling, Stocks on red: What Investor need do? எண்ணெய் ஏரிகிறது, ரூபாய்ச் சரிகிறது.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?!