நடிகர்
சூர்யா
நடிப்பில்
எதற்கும் துணிந்தவன்
படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. என்னதான்
ஜெய் பீம்
, சூரரைப்போற்று படம் OTT யில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் படம் திரையில் வெளியாவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பாண்டிராஜ்
இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இதற்கு முன் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு OTT வெளியான படம் ஜெய் பீம். இருளர் வாழ்வியலை எடுத்துச்சொன்ன இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
என்ன நடந்தாலும் அதை மட்டும் மறந்துடாதீங்க தனுஷ் : ரஜினி
இருப்பினும் இப்படத்திற்கு சில சர்ச்சைகளும் எழுந்தது. இப்படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சியில் குறிப்பிட்ட ஒரு ஜாதியை தவறாக சித்தரித்ததாக கூறப்பட்டு இப்படத்திற்கு ஒரு அரசியல் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. நடிகர் சூர்யாவிற்கு எதிராக பல போராட்டங்களும் நடத்தப்பட்டது.
நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரிக்க ஜெய் பீம் படக்குழுவினர் படத்திலிருந்து அக்காட்சியை நீக்கினர். இந்நிலையில் தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகவுள்ள நிலையில் சூர்யா ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக எங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என அந்த அரசியல் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜெய் பீம் படத்தின் மூலம் எங்கள் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக நடிகர் சூர்யா எங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை. எனவே சூர்யா மன்னிப்பு கேட்கும்வரை எதற்கும் துணிந்தவன் படத்தை கடலூரில் திரையிடக்கூடாது என அறிக்கை விட்டு சூர்யா ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளனர்.
சூர்யா
இந்த அறிக்கையை கண்ட சூர்யா ரசிகர்கள் கடும் வருத்தத்தில் இருக்கின்றனர். மேலும் சிலர் படம் வெளியாகும் நேரத்தில் இப்படி வேண்டுமென்றே செய்வதாகவும் கூறிவருகின்றனர். இதற்கு சூர்யா தரப்பிலிருந்து என்ன பதில் வருமென்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?