சர்வதேச குளுக்கோமா வாரம் இன்று ஆரம்பமாகின்றது.
இதற்கமைவாக நாட்டில் உள்ள மக்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த வாரத்தல் முன்னெடுக்கப்படுவதாக தேசிய கண் வைத்தியசாலையின் விஷேட கண் வைத்தியர் பிரதிபா கே ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார்.
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர் 40 வயதுக்கு மேற்பட்டோர் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இதேவேளை நாட்டில் உள்ள குளுக்கோமா நோயாளர்களை கண்டறிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய கண் வைத்தியசாலை விஷேட கண் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.