மாஸ்கோ
உக்ரைன் மீது படையெடுத்ததால் ரஷ்யாவில் புகழ்பெற்ற கேமிங் நிறுவனங்கள் தங்கள் விற்பனையை நிறுத்தி உள்ளன.
ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதையொட்டி உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு சில சில நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.ஒரு சில நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது நிறுவன செயல்பாட்டை நிறுத்தியுள்ளன.
தற்போது அந்த வரிசையில் சில சில கேமிங் நிறுவனங்கள் இணைந்துள்ளன, ரஷ்யாவில் எபிக் கேம்ஸ், ஆக்டிவிஷன் Blizzard, CD Projekt RED, Bloober Team, EA ஸ்போர்ட்ஸ், நிண்டெண்டோ எனப் பன்னாட்டு கேமிங் மற்றும் கேமிங் வடிவமைப்பு நிறுவனங்கள் வணிகம் மற்றும் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன,
இது குறித்து “உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் எங்கள் நிறுவனத்தின் புதிய கேமிங் விற்பனையை நிறுத்தி வைக்கிறோம். உக்ரைன் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.