கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற கோவில் தேரோட்டத்தில் தேர் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எலவனாசூர்கோட்டை பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேரோட்டம் காலை தொடங்கியது.
முக்கிய வீதிகள் வழியாக தேர் பயணித்து வந்த நிலையில், மேலப்பாளையம் சாலையில் வந்தபோது திடீரென பெய்த சாரல் மழையால் சக்கரம் வழுக்கி தேர் சாய்ந்தது. இதில் தேரில் அமர்ந்திருந்த பூசாரி சுந்தரம் என்பவர் லேசாகக் காயமடைந்தார்.
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு தேர் நிமிர்த்தப்பட்டு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.