இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நடவடிக்கையானது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிப்பது மட்டுமன்றி, இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை ஊக்குவிக்கும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
On the request of HE @GotabayaR cabinet approved a long term visa option for tourists investing in #LKA! This will not only significantly increase the #FDI but will also encourage more professionals & experts to invest,work & live in #LKA! #GoldenParadiseVisa
— Namal Rajapaksa (@RajapaksaNamal) March 7, 2022