இலங்கையில் மின்சார தடையை தவிர்க்க முடியாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டாலும் மின்சாரம் வழங்கல் ஒழுங்குமுறையை அமுலாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஐந்தாம் திகதியின் பின்னர் நாட்டில் மின்சார தடை இருக்காது என, ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் பல தலைவர்கள் உறுதியளித்தனர். எனினும் இலங்கை மின்சார சபை அதற்கு பதிலளிக்கவில்லை.
குறித்த நேரத்தில் எரிபொருளை வழங்கியிருந்தால் மின் தடையை குறைத்திருக்க முடியும் எனவும், ஆனால் மின்வெட்டை முற்றாக நிறுத்த முடியாது எனவும் மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
எரிபொருள் பற்றாக்குறையினால் நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் அதிகளவு நீரை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.