ஜிஎஸ்டியால் என்ன பிரச்சனை.. சிறு தொழில்களுக்கு என்ன பாதிப்பு.. !

ஜிஎஸ்டி வரியானது ஒரே நாடு ஒரு வரி என்ற கோட்டுபாடால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 1.4 பில்லியன் மக்களை கொண்ட ஒருங்கிணைந்த சந்தையாக மாறியுள்ளது. இதன் மூலம் தொழில் முனைவோர் மற்றும் வேலை உருவாக்கத்தினை ஊக்குவிக்கும் என்ற பெரும் நம்பிக்கையின் மத்தியில் கொண்டு வரப்பட்டது. .

மேலும் நிறுவனங்களை ஒரு முறையான துறைக்குள் கொண்டு வருவதே இதன் நோக்கம். இது நாட்டின் ஜிடிபி வளர்ச்சியினை 10 – 11% ஆக உயர்த்த, மிக முக்கிய அடித்தளமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனினும் இதில் பல்வேறு வரைமுறைகள், பல்வேறு வரி வரம்புகள் என சில பிரச்சனைக்களும் உள்ளது. குறிப்பாக சிறு தொழில் முனைவோருக்கு எதிராக, இந்த ஜிஎஸ்டி உள்ளதாக பரவலாக ஒரு கருத்தும் நிலவி வருகின்றது.

ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்.. சாமானிய மக்கள் அதிர்ச்சி..!

ஜிஎஸ்டி பதிவு?

ஜிஎஸ்டி பதிவு?

6.3 கோடி நிறுவனங்களில் (NSSO 2015 – 2016 தரவின் படி) 1.34 கோடி நிறுவனங்கள் மட்டுமே ஜிஎஸ்டிக்குள் இணைந்துள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றது. இதில் எத்தனை நிறுவனனங்கள் ஜிஎஸ்டி பதிவினை ரத்து செய்துள்ளன என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தரவும் இல்லை. பொதுவாக 20 லட்சத்துக்குள் தொழில் செய்பவர்கள் எனில் ஜிஎஸ்டி பதிவுஇ செய்ய தேவையில்லை.இதில் சேவை நிறுவனங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரி வரம்பும், உற்பத்தி நிறுவனங்களுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேலாக டர்ன் ஓவர் இருந்தால் ஜிஎஸ்டி கட்டாயமாகும்.

சிறு நிறுவனங்கள் பதிவு

சிறு நிறுவனங்கள் பதிவு

ஜிஎஸ்டி அரசின் வரி தளத்தினை விரிவாக்கம் செய்ய உதவுகிறது. இதன் மூலம் சிறு வணிக நிறுவனங்களுக்கு எளிதில் வங்கிகளில் இருந்து கடன் பெற முடிகின்றது. இதன் மூலம் எளிதில் கடன் கிடைக்கிறது. மேலும் ஜிஎஸ்டி-யானது நிறுவனங்களின் பதிவுகளை மிக எளிமையாக்கியுள்ளது. இதனை அலுவலகம் என தனியாக இல்லாமல், குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பல முகவரிகளில் இருந்து பதிவு செய்து கொள்ள அனுமதிக்கிறது.

அலுவலகம் தேவையில்லை
 

அலுவலகம் தேவையில்லை

குறிப்பாக கண்டல்டன்ஸிகள், ஆன்லைன் பயிற்சிகள், யோகா, உடற்பயிற்சிகள், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை என பலவற்றிற்கும் ஒரு சொந்த முறையான அமைப்பினை கொண்டு வர பயன்படுகிறது. இவர்களுக்கு கட்டாயம் அலுவலகம் என்பது தேவை கிடையாது. மாறாக லேப்டாப் அல்லது ஒரு கணினி இருந்தாலே போதுமானது. இதற்காக குறிப்பிட்ட காலத்திற்கு பணியாளர்கள் தேவை இல்லை. வணிக செயல்பாடுகள் மேம்படும் வரையில் தனியாக அலுவலகம் என்பன பலவும் அவசியமில்லாததாகிறது. இதன் மூலம் செலவுகள் குறையும்.

இன்வாய்ஸ் பிரச்சனை

இன்வாய்ஸ் பிரச்சனை

அதேசமயம் ஜிஎஸ்டியில் உள்ள பெரும் பிரச்சனையே இன்வாய்ஸ் தான். பெரு நிறுவனங்களில் இருந்து, சிறு நிறுவனங்களுக்கு கொடுத்து அவுட்சோர்ஸிங் மூலம் பணி செய்வார்கள். இங்கு சிறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி இல்லையெனில் ஆர்டர் கிடைப்பது கடினமாகிறது. இதே பெரிய நிறுவனங்கள் கட்டாயம் சிறு நிறுவனங்கள் மூலம் கட்டாயம் அவுட்சோர்சிங் செய்ய வேண்டுமெனில் தங்கள் பாக்கெட்டுகளில் இருந்து ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.

பாதிப்பு

பாதிப்பு

இதற்கு சிறந்த உதாரணம் திருப்பூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல பெரிய டெக்ஸ்டைல் நிறுவனங்களில், இருந்து ஆயிரக்கணக்கான சிறு உற்பத்தியாளர்கள் ஆர்டர் எடுத்து தைப்பார்கள். ஆனால் ஜிஎஸ்டி வருகைக்கு பின்னர் ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் பதிவு செய்யப்பட்ட ஜிஎஸ்டி உற்பத்தியாளராக இருந்தால், உங்கள் வாங்குதல்களுக்கு செலுத்தப்படும் வரிக்கு இன்புட் கிரெடிட்டினை (ITC) பெற முடியும்.

 கோரிக்கைகள்

கோரிக்கைகள்

ஜிஎஸ்டியின் வருகைக்கு பின்னர் ஏராளமான சிறுகுறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக மேற்கண்ட சிறு குறு நிறுவனங்களை ஜிஎஸ்டியில் சேர கட்டாயப்படுத்தக் கூடாது. இதற்கிடையில் 40 லட்சம் ரூபாய் என்ற வரம்பினை 50 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும். அதோடு பொருட்கள் அல்லது சேவை வழங்குபவர்கள் வாங்குபவர்களிடன் இருந்து பணம் பெற்ற பின்னர் ஜிஎஸ்டியினை செலுத்த கேட்க வேண்டும். மூன்றாவது காலாண்டுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி செலுத்தும் படி செய்யலாம்,. இதன் மூலம் செலவினை குறைக்க முடியும். இது தொழில் முனைவோருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி

English summary

How GST impact on small businesses?

How GST impact on small businesses?/ஜிஎஸ்டியால் என்ன பிரச்சனை.. சிறு தொழில்களுக்கு என்ன பாதிப்பு.. !

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.