உக்ரைன்- ரஷியா இடையே போர் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று 2-வது முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 35 நிமிடங்கள் நீடித்ததாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களும் உக்ரைனில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், உக்ரைன் மற்றும் ரஷியா இடையே நேரடி உரையாடல் தொடர்வது குறித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு உதவிகரமாக இருந்ததற்கு பிரதமர் மோடி, உக்ரைன் அதிபருக்கு பாராட்டு தெரிவித்தார். சுமியில் இருந்து இந்தியர்களை மீட்க உக்ரைன அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கீவ், கார்கிவ், சுமி, மரியபோல் நகரங்களில் இருந்து இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கான ரஷியா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.