தமிழகத்தில் இன்று முதல் அனைத்து மதுபானங்களில் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தை தொடர்ந்து புதுசேரியிலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழ்நாடு வாணிபகழகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குவார்ட்டர் தற்போது விற்கும் விலையைவிட கூடுதலாக 10 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. பீர்பாட்டில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வால் மதுபானங்கள் விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கூடுதலாக சுமார் 200 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுபான விலை உயர்வால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மதுபானங்களின் விலை உயர்வு குறித்து அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் மதுபானங்களின் புதிய விலைப்பட்டியலை அனைத்து கடைகளின் முகப்பிலும் ஒட்ட வேண்டும். புதிய விலையின் படி மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.