ஐந்து பவுனுக்குக் குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி செய்த தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தள்ளுபடி செய்த தொகையைக் கூட்டுறவு வங்கிகளுக்கும், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் அரசு இன்னும் வழங்கவில்லை எனச் செய்திகள் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கூட்டுறவுச் சங்கங்களின் வைப்புநிதியைக் கடன் தள்ளுபடிக்குப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளதாகச் செய்தி வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வேளாண் கடன் வழங்கவும், முதிர்வுத் தொகை வழங்ககவும் போதிய நிதி இல்லாமல் கூட்டுறவுச் சங்கங்கள் திண்டாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.