நாட்டின் 91.7 சதவீதமான நுண் தொழில் முயற்சியாளர்கள் இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்களை பாரியளவிலான தொழில் முயற்சியாளர்களாக மேம்படுத்துவதன் தேவையை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் இவர்களுக்கான வசதிகளையும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் காரணமாக இவ்வாறான நிலையங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 3 மடங்காக அதிகரிக்கும்.
இந்த துறை தொடர்பில் விசேட நிபுணர்களைத் தொடர்புபடுத்தி புதிய தொழில் முயற்சிகளை மீளக் கட்டியெழுப்புவதே அமைச்சரின் நோக்கமாகும்.