சபரிமலை- பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
மார்ச் 19 இரவு வரை பூஜைகள் நடைபெறும்.நாளை மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். இரவு 7:00 மணிக்கு கொடியேற்றுக்கு முன்னோடியான பிரகார சுத்திகிரியைகள் நடக்கும். இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.மார்ச் 9 அதிகாலை 5:00 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வழக்கமான நெய்யபிேஷகம் கணபதிேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் காலை 9:00 மணிக்கு பிம்பசுத்தி பூஜைகளும் கொடிபட்டத்துக்கான பூஜைகளும் நடக்கும்.
காலை 10:30 முதல் காலை 11:30 மணிக்கு இடையே தங்க கொடி மரத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கொடியேற்றுவார். தொடர்ந்து தினமும் ஸ்ரீபூதபலி உற்சவபலி யானை மீது சுவாமி எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.மார்ச் 17ல் சரங்குத்தியில் பள்ளி வேட்டையும் மார்ச் 18 ல் பம்பையில் ஆராட்டும் நடக்கும். ஆராட்டு முடிந்து இரவு சன்னிதானம் சுவாமி திரும்பியதும் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.
இந்த நாட்களுக்கு இடையில் சித்திரை மாத பூஜைகள் மார்ச் 15ல் தொடங்கும். அன்று பக்தர்களுக்கு விஷூ கைநீட்டம் வழங்கப்படும். மார்ச் 19 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மார்ச் 9 முதல் 19 வரை தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement